மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுவருகின்றது. இதன் ஒருபகுதியாக வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் உள்ள அரசுப் பள்ளியை சிஆர்பிஎப் வீரர்கள் சுத்தம்செய்தனர். இதில் பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணியாக சென்றனர்.
அரசுப் பள்ளியை சுத்தம் செய்த சிஆர்பிஎப் வீரர்கள் - அரசுப் பள்ளியை சுத்தம் செய்த சிஆர்பிஎப் வீரர்கள்
திருவள்ளூர்: பூவிருந்தவல்லியில் உள்ள அரசுப் பள்ளியை சிஆர்பிஎப் வீரர்கள் சுத்தம் செய்தனர்.
தூய்மை விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்