திருவள்ளூர் மாவட்டம்காட்டூரில் உள்ள இருளர் பழங்குடி மகளிர்களுக்குசிபா - எஸ்டி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் உவர் நீர் மீன் தொழில்நுட்பங்களோடு, இன்று (அக்.2) நண்டு மற்றும் கோழிப்பண்ணைகள் அமைத்து தரப்பட்டுள்ளன. இந்த பண்ணைகள் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, இறால்கள் மற்றும் மீன்கள் விடும் நிகழ்ச்சியும், கோழிப்பண்ணைகளில் கோழிகள் விடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிபா திட்டத்தில் காட்டூர் இருளர் பழங்குடி மகளிர்களை தேர்ந்தெடுத்து ஒரு குழு அமைத்து, அந்த குழுவிற்கு சிந்தாமணி ஈஸ்வரர் மகளிர் குழு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது
இருளர் பழங்குடியினருக்கு பழக்கமான தொழில் என்பதால் இந்த பண்ணைகள் மூலம் வேலைவாய்ப்பு, சுய வருமானம், வங்கியில் சேமிப்பு, குடும்பம் மற்றும் சமுதாய முன்னேற்றங்கள் மற்றும் வாழ்வாதார வழிகளும் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.