திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலை கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்ததாக கூறி சிபிஐ கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட துணை செயலாளர் ஜெ. அருள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவலர்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
அதே போல் கிராம மக்கள் மீது காவல் துறையினர் பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காவல் துறையினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் சிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.