திருவள்ளூர்: மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றிய சரஸ்வதி (55) என்பவர் சென்னை வடபழனியைச் சேர்ந்தவர். இந்நிலையில் இவர் நேற்று (ஆகஸ்ட் 17) வழக்கம்போல், திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பணிக்குச் சென்றுள்ளார்.
அங்கு வழக்கு விசாரணை ஒன்றின் முடிவில் நீதிபதி செல்வ சுந்தரி தீர்ப்புக்கான தகவலை வாசித்துக் கொண்டிருந்தார். சரஸ்வதியும் நீதிபதி தெரிவித்த தகவல்களைத் தட்டச்சு செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சரஸ்வதி கீழே விழுந்தார்.
உயிரிழந்த சுருக்கெழுத்தாளர் சரஸ்வதி நீதிமன்ற ஊழியர்கள் சோகம்
இதனால் அதிர்ச்சியடைந்த நீதிமன்ற ஊழியர்கள், உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், ஏற்கெனவே சரஸ்வதி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
பணியில் இருந்த சமயத்திலேயே மாரடைப்பால் இறந்ததால், இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:கரோனா பயத்தால் தம்பதி தற்கொலை... நெகட்டிவ் சான்றிதழால் அதிர்ச்சி!