திருவள்ளூர்:ஒண்டிக்குப்பம் பகுதியில் ரமேஷ் - சுதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக வீட்டில் செல்லப் பிராணிகளான நாய், கோழி, புறா உள்ளிட்டவற்றை மிகவும் செல்லமாக வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ரமேஷ் - சுதா தம்பதியர் வளர்த்து வந்த உயர் ரக இனத்தைச் சேர்ந்த நாய் சமீபத்தில் 6 குட்டிகளை ஈன்றது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு 6 குட்டிகளில் 3 குட்டிகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாகவும், இதனை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் மணவாள நகர் காவல் நிலையத்தில் தம்பதி புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், தாங்கள் பல ஆண்டுகளாக ஒண்டிகுப்பம் பகுதியில் வசித்து வருவதாகவும் செல்லப் பிராணிகளை ஆசையுடன் வளர்த்து வருவதாகவும், ஒண்டிகுப்பம் மற்றும் மணவள நகர் பகுதிகளில் அடிக்கடி பல வீடுகளில் நகை, பணம் உள்ளிட்ட உயரிய பொருள்கள் திருடுபோவது வாடிக்கையாகிவிட்டது.