தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் முன்விரோதம்: கவுன்சிலர் வீடு சூறை! - திருவள்ளூரில் தேர்தல் முன்விரோதம்: கவுன்சிலர் வீடு சூறை

திருவள்ளூர்: பேரம்பாக்கம் கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக கவுன்சிலர் வீட்டை அடித்து சூறையாடிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சூறையாடப்பட்ட கவுன்சிலர் வீடு
சூறையாடப்பட்ட கவுன்சிலர் வீடு

By

Published : Mar 27, 2020, 6:37 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஒன்றிய கவுன்சிலரான குலாபி என்கின்ற பிரசாந்த். இவர் நேற்று முன்தினம் (மார்ச் 25) பேரம்பாக்கம் பஜாருக்குச் சென்றுள்ளார்.

தடை உத்தரவு காரணமாக திறக்கப்பட்ட கடைகளை அடைக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, கடை உரிமையாளர்களிடயே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கவுன்சிலர் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர், நள்ளிரவில் கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்த 10 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன், ஒரு காரையும், மூன்று இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்.

சூறையாடப்பட்ட கவுன்சிலர் வீடு

இது குறித்து காவல் நிலையத்தில் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாராய விற்பனைக்குத் தடையாக இருந்தவர் மீது தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details