தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் கிளைச் சிறையில் தலைவிரித்தாடும் லஞ்சம்

பொன்னேரியில் உள்ள சிறையில் காவலர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் கிளைச் சிறை
திருவள்ளூர் கிளைச் சிறை

By

Published : Jun 22, 2021, 6:33 AM IST

திருவள்ளூர்: பொன்னேரியில் நீண்ட காலமாக கிளைச் சிறை இயங்கிவருகிறது. இங்கு சராசரியாக 65-இல் இருந்து 100 பேர் வரை கைதிகளாக சிறை வைக்கப்படுகின்றனர். இந்தக் கைதிகளை பார்க்க உரிய ஆவணங்கள், சரியான காரணத்துடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

ஆனால், சமீப காலமாக காசு கொடுத்தால் நேரம் காலமின்றி எளிதாக கைதிகளைப் பார்க்கக் கூடிய நிலை தற்போது உருவாகி இருக்கிறது. ரூ.500 முதல் ரூ.1,000 வரை கொடுத்தால், எதை வேண்டுமானாலும் சிறையில் உள்ள கைதிகளிடம் கொடுக்கலாம். அவர்களைச் சந்தித்து பேசலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

திருவள்ளூர் கிளைச் சிறையில் தலைவிரித்தாடும் லஞ்சம்

பொன்னேரி சிறைக்காவலர்கள் இந்த லஞ்சத்தை ஏழை, எளியவர் என்று பாராமல் கேட்டு வாங்குகின்றனர். இந்தக் கிளைச் சிறை அருகிலேயே கூடுதல் மாவட்ட முதன்மை நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் மற்றும் கோட்டாட்சியர்,வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளன.

இந்த அலுவலங்களுக்கு அருகிலேயே இப்படி லஞ்சம் தாண்டவமாடும் பொன்னேரி கிளைச் சிறையில் கைதிகளைக் காண லஞ்சம் கேட்கப்படுவது முக்கியக் குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

இதனை உடனடியாக மாவட்ட காவல் துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:ஏடிஎம் 'ஷட்டரை' வைத்து சென்னையில் வித்தைக் காட்டும் நபர்கள்; பல லட்சம் அபேஸ்!

ABOUT THE AUTHOR

...view details