திருவள்ளூர் மாவட்டத்தில், கரோனா நோய் தொற்றால் இதுவரை 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நோய்த் தடுப்பு நடவடிக்கையாக, பாதிப்புக்குள்ளான பகுதிகளான சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு, மக்கள் நடமாட்டம் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் உள்ள வங்கிகளை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூரில் 33 பேருக்கு கரோனா: வங்கிகளை மூட ஆட்சியர் உத்தரவு - திருவள்ளூரில் 33 பேருக்கு கரோனா
திருவள்ளூர்: கரோனாவால் திருவள்ளூரில் இதுவரை 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள வங்கிகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
![திருவள்ளூரில் 33 பேருக்கு கரோனா: வங்கிகளை மூட ஆட்சியர் உத்தரவு ஆட்சியர் உத்தரவு படி மூடிய நிலையில் காணப்படும் வங்கி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6802588-thumbnail-3x2-trl.jpg)
ஆட்சியர் உத்தரவு படி மூடிய நிலையில் காணப்படும் வங்கி
ஆட்சியர் உத்தரவின்படி கரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வங்கிகள் மூடல்
அதே நேரத்தில், இப்பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்கள் முழுவீச்சில் செயல்பட வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:என்95 முகக் கவசங்களை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தலாம்!