திருவள்ளூர்: கரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று (ஜூலை 4) ஆம் தேதி கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜவஹர்லால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
10,000 கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி - corona vaccine
திருவள்ளூரில் 10 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அம்மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், "திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 807 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 2,017 பாலூட்டும் தாய்மார்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் குறைந்த கரோனா பாதிப்பு!