தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் போதிய படுக்கைகள் இன்றி கரோனா நோயாளிகள் அவதி!

திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கரோனா நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருவள்ளூரில் போதிய படுக்கைகள் இன்றி கரோனா நோயாளிகள் அவதி!
திருவள்ளூரில் போதிய படுக்கைகள் இன்றி கரோனா நோயாளிகள் அவதி!

By

Published : May 9, 2021, 5:21 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 69 ஆயிரத்து 476 நபர்கள் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 880 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 7 ஆயிரத்து 284 நபர்கள் அரசு மருத்துவமனைகள், பிரத்யேக கரோனா சிகிச்சை மையங்கள், தனியார் மருத்துவமனை, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்த படுக்கை எண்ணிக்கை ஐநூறாக உள்ளது. இவற்றில் கரோனா நோயாளிகளுக்கு 250 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை பிரிவில் உள்ள எண்பது படுக்கைகளு முழுவதுமாக நிரம்பி விட்டது. ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 150 படுக்கைகளும் நிரம்பி விட்டது. இதனால் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளாவோர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

அதிகப்படியான படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரும் கரோனா நோயாளியின்மகன்.

இதன் காரணமாக கரோனா நோயாளிகள் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் முன்னர் தமிழ்நாடு அரசு ஆக்ஸிஜன் வசதியுடைய கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : கரோனா பரவல்: வார் ரூமிற்கு 6 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details