திருவள்ளூர் மாவட்டத்தில் 467 பேர் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஏற்கெனவே 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று (மே 13) மட்டும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த, ஒரு பெண் உட்பட ஏழு பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில் பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி காவல் நிலையத்தில், இரண்டாம் நிலைய காவலராகப் பணியாற்றி வந்த காவலரும், குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.