தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைமைக் காவலருக்கு கரோனா - காவல் நிலையத்திற்கு சீல் - head constable Corona infection

திருவள்ளூர்: திருத்தணியில் மதுவிலக்கு அமல் பிரிவில் பணிபுரியும் தலைமைக் காவலருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.

police
police

By

Published : Jul 4, 2020, 9:28 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆர்.கே பேட்டையில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையம் உள்ளது. இங்கு பணிபுரியும் தலைமைக் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்தக் காவல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவரோடு பணிபுரிந்த சக காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கும், பரிசோதனை மேற்கோள்ளப்பட்டுள்ளது. அவர் வசித்துவந்த பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஒரே நாளில் 65 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details