கடலூர் மாவட்டம் பன்ருட்டி பாரதி நகரைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென நரம்புத்தளர்ச்ச ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக மே மாதம் 4ஆம் தேதி அங்கிருந்து சென்னை புழல் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.
பின் அந்தக் கைதி சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கைதிக்கு கரோனா பாதிப்பு! - குண்டர் சட்ட கைதி
திருவள்ளூர்: கடலூரிலிருந்து சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட கைதிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புழல் சிறைச்சாலை
இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: கரோனா: சென்னையில் நேற்றுமட்டும் 504 மருத்துவ முகாம்கள்