தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் கரோனா பாதித்த முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை - கரோனா பாதித்த முதியவர் தற்கொலை

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பெற்றுவந்த 67 வயது முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனை
திருவள்ளூர் அரசு மருத்துவமனை

By

Published : Jun 11, 2020, 12:11 PM IST

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேட்டை அடுத்த மெல்மணம்பெடு கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் (67). அவரது மனைவி தொழிலாளர் நல வாரியத்தில் அலுவலராக இருந்து ஓய்வுபெற்றவர். அதனால் அவர் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தை உருவாக்கி அதன்மூலம் தொழிலாளர்களுக்கு உதவிகளைச் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து ஜூன் 6ஆம் தேதி அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். அங்கு அவருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து அவர் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனை

மருத்துவமனைக்கு அவரைப் பார்க்க யாரும் வரவில்லை என்பதால் அவர் மன உளைச்சலில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (ஜூன் 10) நள்ளிரவு புதிதாகக் கட்டப்படும் மருத்துவமனை வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க:வேலூர்: கரோனா பாதிப்பு 128ஆக அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details