தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை அருகே இரண்டு பெண்களுக்கு கரோனா பாதிப்பு - சென்னையில் கரோனா

திருவள்ளூர்: சென்னை அருகே மாங்காடில் சிங்கப்பூர் மற்றும் கேரளாவிலிருந்து வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் இருவரையும் வீட்டிலேயே வைத்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Corona impact on two women near Chennai  two women Corona impact near Chennai  Chennai Corona  சென்னை அருகே இரண்டு பெண்களுக்கு கரோனா பாதிப்பு  சென்னையில் கரோனா  இரண்டு பெண்களுக்கு கரோனா பாதிப்பு
Corona impact on two women near Chennai two women Corona impact near Chennai Chennai Corona சென்னை அருகே இரண்டு பெண்களுக்கு கரோனா பாதிப்பு சென்னையில் கரோனா இரண்டு பெண்களுக்கு கரோனா பாதிப்பு

By

Published : Mar 21, 2020, 12:04 AM IST

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் உள்ள அரசு பொது சுகாதார மருத்துவமனைக்கு காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகளுடன் இரண்டு பெண்கள் வந்தனர்.

அவர்களை விசாரித்ததில் இருவரும் மாங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததும் மற்றொருவர் கேரளாவில் இருந்து வந்ததும் தெரிய வந்தது.

உடனடியாக இருவரையும் மருத்துவமனையில் தனிமைப்படுத்திய மருத்துவர்கள் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் வருவதற்குள் அங்கிருந்த பெண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனை பதிவேட்டில் இருந்த முகவரிக்கு சென்ற சுகாதாரத்துறையினர் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்து கண்காணித்து வருகின்றனர். அதேபோல் மற்றொரு பெண்மணியும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details