தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா எதிரொலி: மாநில எல்லைகளில் சோதனையைத் தீவிரப்படுத்திய காவல் துறை! - Tamilnadu corona update

திருவள்ளூர் : தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு - ஆந்திர மாநில எல்லைகளில் சோதனைகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Corona echo: Police intensify raid on state borders!
Corona echo: Police intensify raid on state borders!

By

Published : Jun 14, 2020, 10:34 PM IST

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் இருக்கும் சோதனைச்சாவடியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தலைமையிலான காவல் துறையினர் இ-பாஸ் வைத்திருக்கும் வாகனங்களை மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்களை முறையான இ-பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கின்றனர்.

அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு அல்லது மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் இ-பாஸ் இல்லை என்றால், திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. அதேபோன்று மாஸ்க் அணியாமல் வருபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனர்.

மேலும் தமிழ்நாடு - ஆந்திர மாநில எல்லைகளிலுள்ள மருத்துவர்கள், செவிலியர் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால், அந்த இடத்தில் போதிய அளவு மருத்துவர்கள், செவிலியரை பணியமர்த்த வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத் துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details