தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா, போதை விழிப்புணர்வில் பள்ளி மாணவர்கள் - பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு

கரோனா, போதை பழக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றியும், நாட்டுப்புறப் பாடல்கள் பாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கரோனா, போதையிலிருந்து தற்காத்துக்கொள்ள பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு
கரோனா, போதையிலிருந்து தற்காத்துக்கொள்ள பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு

By

Published : Aug 11, 2021, 10:29 PM IST

திருவள்ளூர்: பொன்னேரியில் சுப்பிரமணி ஆசான் சிலம்ப பயிற்சிக்கூடம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.

இங்கு 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் இலவசமாக சிலம்பம், தற்காப்புக் கலைகளை கற்று வருகின்றனர்.

நிதி உதவி

தற்போது கரோனா வைரஸ் (தீநுண்மி) மக்களை அச்சுறுத்திவரும் சூழ்நிலையில், பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் பள்ளி மாணவர்கள், பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர், கரோனா, போதை ஒழிப்பு குறித்து பாடல்களை சென்னை லயோலா கல்லூரி பேராசிரியரும், நாட்டுப்புற கலைஞருமான காளீஸ்வரன் பாட அதற்கு மாணவர்கள் சிலம்பம் சுற்றி அசத்தினர்.

சிலம்பம், கரகாட்டம் ஆடி அசத்திய மாணவர்களுக்கும், நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கும் நிதி உதவிகளை பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.

கரகாட்டம் ஆடி விழிப்புணர்வு நடத்திய மாணவர்கள்

இந்நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் அனுரத்னா, சிலம்பம் பயிற்சி ஆசிரியர் அரிதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'பிஇ, பிடெக் படிப்பு - 1 லட்சத்து 39 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு'

ABOUT THE AUTHOR

...view details