திருவள்ளூர்: கரோனா மூன்றாம் அலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவள்ளூர் பேருந்து நிலையம், சந்தைப் பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆகியோர் இன்று (ஆக. 02) வழங்கினர்.
மேலும், பேருந்தில் பயணிக்கும் பயணிகள் சமூக இடைவெளியுடன் இருத்தல், கிருமிநாசினி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனப்பேருந்து பயணிகளுக்கு அறிவுறுத்தியதுடன், சந்தைப் பகுதியில் வியாபாரிகளிடம் முகக்கவசம் அணியாமல் வரும் நுகர்வோர்களுக்கு பொருள்களை விற்பனை செய்யவேண்டாம் எனவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வியாபாரிகள் அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
உறுதிமொழி
பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கரோனாவிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்களை ஏற்று மக்கள் செயல்பட வேண்டும் என்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.