திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் முன்னிலையில், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவைப் பொதுமக்கள் முறையாகக் கடைப்பிடிக்கிறார்களா என காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும். அரசு பொது மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். ஊராட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.