தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துண்டாகிய சேரன் விரைவு ரயில் இணைப்பு - ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்ட விபத்து

சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் விரைவு ரயிலின் இரு பெட்டிகளின் இணைப்பு திருவள்ளூர் அருகே துண்டாகியதில் நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

Cheran Express train  connection of Cheran Express broken  thiruvallur  thiruvallur news  train  train issue  Cheran Express train issue  சேரன் விரைவு ரயில்  சேரன் விரைவு ரயில் இணைப்பு துண்டிப்பு  துண்டாகிய சேரன் விரைவு ரயில் இணைப்பு  திருவள்ளூர்
துண்டாகிய சேரன் விரைவு ரயில் இணைப்பு

By

Published : Nov 6, 2022, 12:00 PM IST

திருவள்ளூர்: சென்னை சென்ட்ரலில் இருந்து 12673 என்ற எண் கொண்ட சேரன் விரைவு ரயில் புறப்பட்டு திருவள்ளூர் அருகே இரவு 11 மணிக்குச்சென்றபோது S7 மற்றும் S8 ஆகிய 2 பெட்டிகளிடையே பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரயிலில் பயணித்த ரயில் பயணிகள் பயத்தில் அலறினர்.

திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4ஆவது மேடையில் ரயில்சென்ற போது திடீரென்று இரண்டு பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கொக்கி துண்டிக்கப்பட்டு பலத்த சத்தம் கேட்டதால் ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெருத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

உடனடியாக ரயில்வே அலுவலர்களுக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் சீரமைப்புப்பணிகளில் ஈடுபட்டனர். பின்னர், சென்னை பெரம்பூர் கேரேஜில் இருந்து இணைப்பு கொக்கிகள் புதியதாக வரவழைக்கப்பட்டு, ரயிலுடன் இணைக்கப்பட்டபின் அரக்கோணம் மார்க்கமாக கோவைக்கு புறப்பட்டுச்சென்றது.

துண்டாகிய சேரன் விரைவு ரயில் இணைப்பு - ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்ட விபத்து

இதையும் படிங்க: கார்த்திகை அமாவாசை: மதுரையிலிருந்து காசிக்கு சுற்றுலா ரயில்

ABOUT THE AUTHOR

...view details