திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியை 20 ஆண்டுகளாக அதிமுக கைப்பற்றி வந்தது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகரன் ஒன்பதாயிரத்து 689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பொன்னேரியில் காங்கிரஸ் வெற்றி! - Congress Winning Constituency
திருவள்ளூர்: பொன்னேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பலராமன் 84 ஆயிரத்து 839 வாக்குகளும், அமமுக வேட்பாளர் பொன் ராஜா 2832 வாக்குகளும், மநீம வேட்பாளர் தேசிங்குராஜா 5 ஆயிரத்து 394 வாக்குகளும், நாதக வேட்பாளர் மகேஸ்வரி 19 ஆயிரத்து 27 வாக்குகளும் பெற்றனர்.
பொன்னேரி தொகுதியில் காலை முதலே அதிமுக - காங்கிரஸ் இடையே போட்டி நிலவிவந்த நிலையில், இறுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேருக்கு அரசு அலுவலர் சான்றிதழ் வழங்கினர்.