தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிக்கெட் தராததால் திரையரங்கில் ரகளை..! அடியாட்களுடன் வந்த இளைஞர்கள் - theater

திருவள்ளூர் தேரடி பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில், மது போதையில் படம் பார்க்க வந்த இளைஞர்களுக்கு, டிக்கேட் கொடுக்க மருத்ததால், அந்த இளைஞர்கள், அடியாட்களுடன் வந்து திரையரங்கு ஊழியர்களை தாக்கியுள்ளனர்.

டிக்கெட் தராததால் திரையரங்கில் அடியாட்களுடன் வந்து ரகளை செய்த இளைஞர்கள்
டிக்கெட் தராததால் திரையரங்கில் அடியாட்களுடன் வந்து ரகளை செய்த இளைஞர்கள்

By

Published : Jun 12, 2022, 7:11 AM IST

திருவள்ளூர்:தேரடி அருகே உள்ள தனியார் திரையரங்கில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரையரங்கில் மது அருந்திவிட்டு வரும் நபர்களுக்கு டிக்கெட் விநியோகிப்பது இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜூன் 10ஆம் தேதி அன்று, மது அருந்திவிட்டு, திரையரங்கிற்கு வந்த சில இளைஞர்கள், டிக்கெட் கேட்டுள்ளனர். அவர்கள் மது போதையில் தள்ளாடிக் கொண்டு வந்ததால் டிக்கெட் கொடுக்க முடியாது என தியேட்டர் நிர்வாகம் அனுப்பி வைத்து உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், அடியாட்களை அழைத்து வந்து, திரையரங்கில் புகுந்து, அங்கு பணிபுரியும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசி பலமாக தாக்கினர். திரையரங்கையும், அடித்து நொறுக்கினர். இதனால் திரையரங்கில் கலவரம் போல் காணப்பட்டது. இது குறித்து திரையரங்கு மேலாளர் டி.என்.அரசு திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகேர்லா செபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன் மேற்பார்வையில் திருவள்ளூர் டவுன் காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பபி வழக்குப்பதிவு செய்து திரையரங்கை அடித்து நொறுக்கி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகிறார்.

டிக்கெட் தராததால் திரையரங்கில் அடியாட்களுடன் வந்து ரகளை செய்த இளைஞர்கள்

தியேட்டரை அடித்து நொறுக்கியதுடன் ஊழியர்களை தாக்கிய சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:ஜார்க்கண்ட் போராட்டத்தில் வன்முறை - 2 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details