திருவள்ளூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அவரது உதவியாளர் ரமேஷ் ஆகியோர் வேலை வாங்கி தருவதாக ரூ.1.5 கோடி மோசடி செய்து விட்டதாக காவல் ஆணையரிடம் பொன்னேரி பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2018 ஆம் ஆண்டு கால்நடை துறையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன், தெரிந்த ஆட்கள் அரசு வேலை கேட்டால் அனுப்பும்படி கூறினார்.
தனக்கு தெரிந்த பலர் சுமார் ரூ.1.5 கோடி வரை உடுமலை ராதாகிருஷ்ணனின் பினாமியான ரமேஷிடம் வழங்கினோம்.
பின்னர் திடீரென அறிவிக்கப்பட்ட அரசு வேலை தற்காலிமாக நிறுத்தி வைக்கக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டதால், பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு உடுமலை ராதாகிருஷ்ணன் தீர்ப்பு சாதகமாக வரும் என கூறினார்.