தமிழ்நாடு

tamil nadu

தனியார் தொழிற்சாலைப் பேருந்து கவிழ்ந்து விபத்து - வெளியான சிசிடிவி காட்சி!

By

Published : Jan 5, 2021, 9:19 PM IST

திருவள்ளூர்: திருத்தணி அருகே தனியார் தொழிற்சாலைப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்படட் பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பேருந்து கவிழ்ந்து விழும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

accident
accident

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரக்கோணம் சாலையில் இயங்கிவரும் தனியார் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் திருத்தணி, அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்துவருகின்றனர். வழக்கம்போல் இன்று (ஜன. 05) காலை பள்ளிப்பட்டு பகுதியிலிருந்து 30-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து திருத்தணி நோக்கி வந்துகொண்டிருந்தது.

தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்து - வெளியான சிசிடிவி காட்சி

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பொன்பாடி சோதனைச்சாவடி அருகே வந்துகொண்டிருந்தபோது லேசாக மழை பெய்துகொண்டிருந்ததால் எதிரில் வேகமாக வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதுவதைத் தடுக்க பேருந்து ஓட்டுநர், சாலையோரமாகப் பேருந்தை திருப்பியபோது திடீரென்று பேருந்து நிலைதடுமாறி சாலையோரத்தில் குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம்செய்த 20-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்குப் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவர்களில் மூன்று பேர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் பேருந்து விபத்துக்குள்ளாகும் நேரடி சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக திருத்தணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: தொழில்நுட்ப படிப்புகளை மாநில மொழிகளில் வழங்க குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details