திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் ஜெனிஃபர் - நவஜோதி தம்பதியரின் மூத்த மகள் நர்மதா (19).
தந்தை ஜெனிஃபர் இலங்கையில் வசித்துவருகிறார். தாயார் இறந்ததால் தனது பெரியம்மாவுடன் வாடகை வீட்டில் நர்மதா வசித்து வந்தார்.
கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை! - பேஷன் டிசைன் கல்லூரிகள்
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்றுவந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் சென்னை போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனர் முதலாமாண்டு படித்து வந்தார். வழக்கம்போல் நேற்று இரவு (அக்டோபர் 21) படுக்கை அறைக்கு சென்ற நர்மதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் நர்மதாவின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், நர்மதாவின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காதல் விவகாரமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.