திருவள்ளூர்: திருவாலங்காடு அடுத்த ஓரத்தூர் பகுதியைச் சேர்ந்த அடைக்கலம் என்பவரது மகன் நீதிதேவன் (19). இவர் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் எப்பொழுதும் கல்லூரியை முடித்துவிட்டு ரயிலில் வீட்டிற்கு திரும்பவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல கல்லூரி முடித்துவிட்டு, நீதிதேவன் ரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தனது கல்லூரி நண்பருடன் நீதிதேவனும் இறங்கியுள்ளனர். பின்னர் இருவரும் ரயிலில் ஏறும்போது, தனது நண்பன் ரயிலில் ஏறி விட்டாரா என்பதை பார்ப்பதற்காக நீதிதேவன் திரும்பிப் பார்த்துள்ளார். அப்பொழுது அவரின் கால் எதிர்பாராத விதமாக ரயிலுக்கு அடியில் சிக்கியது.