தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் வகுப்பு பாடம் புரியாததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - பாரதி மகளிர் கல்லூரி

திருவள்ளூர்: பொன்னேரி அருகே ஆன்லைன் வகுப்பு பாடம் புரியாததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி
தற்கொலை செய்துகொண்ட மாணவி

By

Published : Sep 21, 2020, 4:14 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அருமந்தை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கிரி என்பவரது மகள் தர்ஷினி (18). அண்மையில் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இளங்கலை (பிஎஸ்சி) முதலாமாண்டு சேர்ந்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று (செப்.20) மாலை, தர்ஷினி ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் பாடங்கள் தமக்குப் புரியவில்லை எனத் தாயாரிடம் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் புரியவில்லை என்றாலும், போகப் போக புரியம், பார்த்து கொள்ளலாம் என தாய் கூறியுள்ளார். எனினும் சமாதானம் அடையாத தர்ஷினி வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து தாயார், அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கிட்ட நிலையில் இருந்த தர்ஷினியை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்தார்.

மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 21) சிகிச்சைப்பலனின்றி தர்ஷினி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து சோழவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் வகுப்பில் நடத்தப்பட்ட பாடம் புரியாததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details