திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள பெருவாயில், கவரப்பேட்டை, எளாவூர், சுண்ணாம்புகுளம் ஆகிய பகுதிகளில் சாலை பணிகள், புதிய அரசு கட்டடங்கள் கட்டும் பணிகள், அரசு மருத்துவமனை பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று (பிப்.02) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பணிகள் நடைபெறுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசுப் பணிகள் நடைபெறும் இடங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு! - சாலை பணிகளை ஆட்சியர் ஆய்வு
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் அரசுப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேற்று (பிப்.02) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரசுப் பணிகள் நடைபெறும் இடங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு
பின்னர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு ஆணையிட்டார். இந்நிகழ்வில் ஒன்றியக் குழு பெருந்தலைவர் சிவகுமார், துணை பெருந்தலைவர் மாலதி குணசேகரன், பொறியாளர் நரசிம்மன், வட்டாட்சியர் மகேஷ் குமார், கோட்டாட்சியர் செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு கிடங்கை ஆய்வு செய்த ஆட்சியர்