தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூரில் பேருந்துகள் இயக்கம், வியாபாரிகளின் செயல்பாடு குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர்: தமிழ்நாடு அரசு ஊரடங்கு தளர்வை ஜூன் 28ஆம் தேதிவரை அளித்த நிலையில் பேருந்துகளின் இயக்கம், பஜார் வீதியில் வியாபாரிகளின் செயல்பாடு ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸ் நேரில் ஆய்வுசெய்தார்.

பேருந்துகளின் இயக்கம் பஜார் வீதியில் வியாபாரிகளின் செயல்பாடு ஆகியவை குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸ் நேரில் ஆய்வு செய்தார்
பேருந்துகளின் இயக்கம் பஜார் வீதியில் வியாபாரிகளின் செயல்பாடு ஆகியவை குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸ் நேரில் ஆய்வு செய்தார்

By

Published : Jun 22, 2021, 6:15 AM IST

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுமேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

இதையொட்டி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திருவள்ளூர் பேருந்து நிலையம் சென்று திடீர் ஆய்வுமேற்கொண்டார். அங்கு பயணிகளுக்கு கழிவறை வசதிகள் சுகாதாரமான முறையில் உள்ளதா எனவும், பேருந்துகளும் சுகாதாரமாக உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வுமேற்கொண்டார்.

மேலும் பயணிகள் முகக்கவசம் அணிதல், பேருந்துகளில் 50 விழுக்காடு பயணிகள் உள்ளிட்டவை கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வுசெய்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட பஜார் வீதியில் வியாபாரிகளிடம் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா, பொருள்கள் வாங்கவரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிகிறார்களா என்பது குறித்து ஆய்வுசெய்தார். இதில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details