திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுப் பண்ணைத் திட்டம் 2019-20ஆம் ஆண்டிற்கு 55 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்கப்பட்டன. வேளாண்மைத்துறை மூலமாக கூட்டு பண்ணைத் திட்டத்தின் கீழ், 44 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தோட்டக்கலைத் துறையின் மூலமாக 11 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.
உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கிய ஆட்சியர்! - corona updates
திருவள்ளூர்: 5 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
ஒவ்வொரு குழுவுக்கும் தலா ரூபாய் 5 லட்சம் தொகுப்பு நிதி என மொத்தம் 2.75 கோடி வேளாண்இயந்திரம் கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி, இயந்திரங்களின் விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது திருவாலங்காடு மற்றும் கடம்பத்தூர் வட்டாரங்களில் 5 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, வேளாண் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
இதையும் படிங்க: பதுங்கிய சிறுத்தை... பிடிக்க காத்திருக்கும் ஹைதராபாத் படை!