திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 1230 ஏரிகளில் 179 ஏரிகள் 100 விழுக்காடு நிரம்பி உள்ளது. மேலும், அனைத்து நீர்நிலைகளிலும் நீர் நிறைந்து உள்ளதால் குளிக்க தண்ணீரில் இறங்கவும், வேடிக்கை பார்க்கவும் வேண்டாம்.
உள்ளாட்சித் தேர்தலில் 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்தத் தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் நான்கு விதமான வண்ணங்களில் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.