திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கமாக உருவாக்கி ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நீரையும் பருவகாலங்களில் பொழியும் மழை நீரையும் 500 மில்லியன் கன அடி அளவுக்கு இரண்டு முறை ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர குடிநீர் தேவை மற்றும் பாசனத்துக்காக ரூ.380 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய நீர்த்தேக்கம் பணிகளை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.