தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய ஆட்சியர்! - மீட்கப்பட்ட பெண் குழந்தைக்குப் பெயர் வைத்த ஆட்சியர்

திருவள்ளூர்: முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு மாவட்ட ஆட்சியர் தமிழ் பெயரை சூட்டினார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

By

Published : Oct 9, 2020, 9:43 PM IST

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நடைபாதை பகுதி முட்புதரில் அக்டோபர் 5ஆம் தேதி பிறந்து சில மணி நேரமான பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இக்குழந்தையை தேவன் என்பவர் தனது வீட்டிற்கு கொண்டு சென்று குழந்தையை சுத்தம் செய்து பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் ஹேமா இளவரசியிடம் ஒப்படைத்தார்.

பின் அக்குழந்தைக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர் கண்காணிப்பில் தொடர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின் இது குறித்து டாக்டர் ஹேமா இளவரசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்த அலுவலர் கிரிஜா குழந்தையை மீட்டு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவில் ஒப்படைத்தார். பின்னர் அக்குழந்தை இன்று (அக்.9) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

பின் அக்குழந்தைக்கு குந்தவை என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பெயர் சூட்டினார். இதையடுத்து குழந்தை நலக்குழு தலைவர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் ஆகியோர் முன்னிலையில், முகப்பேரில் செயல்படும் கலைச்செல்வி கருணாலயா சிறப்பு தத்து மையத்திற்கு குழந்தையை தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.

குழந்தைக்கு உரிமை கோருபவர்கள் யாரேனும் இருப்பின் 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நலக்குழு, எண் .13, டாக்டர் அப்துல்கலாம் தெரு, எம்.டி.எம் . நகர் , திருவள்ளூர் என்ற முகவரியில் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காத பட்சத்தில் இக்குழந்தையை தத்துகேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோருக்கு தத்துக்கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details