சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மூலக்கடை கனகன் சத்திரம் சாலை சந்திப்பில் பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் மதியம் நடுரோட்டில் சுமார் 7 அடி நீளமுள்ள நல்லபாம்பு திடீரென தனது தலையை தூக்கி படமெடுத்து ஆடியது. இதில் சில வாகனங்கள் அந்த பாம்பை கடந்து சென்ற போதும் அதனை பொருட்படுத்தாமல் அப்படியே இருந்தது.
நடுரோட்டில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு! - madhavaram
திருவள்ளூர்: மாதவரத்தில் நடுரோட்டில் படமெடுத்து நல்ல பாம்பு ஆடியது, இதை கண்ட மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
நடுரோட்டில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு!
இதனை கண்ட பொதுமக்கள் பலர் அச்சத்தில் உறைந்தாலும் அதனை கற்பூரம் ஏற்றி சிலர் வழிபட்டனர். இதற்கிடையில் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஆனது பின்னர் காவல்துறையினர் அந்த நிலைமையை சமாளித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்த பாம்பு நடு ரோட்டில் இருந்து மெதுவாக அருகில் உள்ள மறைவான இடத்தில் ஓடி மறைந்தது. அதுவரை அந்த பாம்பை பிடிக்க யாரும் முன்வரவில்லை.