தமிழ்நாடு

tamil nadu

அனல் மின் திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர்!

By

Published : Feb 24, 2021, 5:31 PM IST

திருவள்ளூர்: அத்திப்பட்டில், 6,376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நிலக்கரியில் இயங்கும் 1 x 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை- III செயல்பாட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.

CM
CM

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், வடசென்னை அனல் மின்நிலைய வளாகத்தில் 250 ஏக்கர் நிலப் பரப்பளவில், 6,376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலக்கரியில் இயங்கும் 1 x 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை III அமைப்பதற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

2 மிக உய்ய அனல் மின் தொழில் நுட்பத்தில் 800 மெகாவாட் திறனுடைய அலகு தமிழ்நாட்டில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை- III தொடக்கம்

இத்தகைய சிறப்புமிக்க வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை III செயல்பாட்டுக்கு கொண்டு வரும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக கொதிகலன் எரியூட்டும் நிகழ்வை தொடங்கிவைத்தார்.
இத்திட்டம் ஆகஸ்டு 2021ஆம் ஆண்டு நிறைவு பெற்று, நாளொன்றுக்கு 19.2 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 6,000 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக கிடைக்கும்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜிவ் ரஞ்சன், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) எஸ்.கே. பிரபாகர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல், பாரத மிகுமின் நிறுவனம் மற்றும் BGRESL நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர் .

இதையும் படிங்க: காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் - எல்லையில் வாட்டாள் நாகராஜ் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details