தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்ட விரோதமாக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடல் - bore well

திருவள்ளூர்: பூவிருந்தவல்லி பகுதியில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகளை ஜேசிபி  இயந்திரம் மூலம் மூடப்பட்டன.

ஆழ்துளை கிணறுகள் மூடல்

By

Published : Jul 21, 2019, 11:42 PM IST

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையை போக்க திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் எடுத்துச் சென்னைக்கு லாரிகள் மூலம் வினியோகம் செய்யபட்டது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி, பாரிவாக்கம், கோலப்பன்சேரி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை வைத்து ஒரு சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகளை அமைத்து குடிநீரை திருடி தண்ணீர் லாரிகள் மூலம் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் பூவிருந்தவல்லி சுற்றுவட்டத்தில் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடல்

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோதமாக செயல்படும் ஆழ்துளை கிணறுகள் மீது நடவடிக்கை எடுக்கக் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், இன்று பூவிருந்தவல்லி வட்டாட்சியர் புனிதவதி தலைமையில் 10 க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சட்டவிரோதமாக தோண்டப்பட்ட 20 க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் மூடப்பட்டது. மேலும் ஆழ்துளை கிணறுகளில் பயன்படுத்தப்பட்டிருந்த மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details