தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இது மருத்துவமனையா... காய்கறி சந்தையா?' - அலுவலர்களுக்கு டோஸ்! - அரசுமருதத்துவமனை,புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வு

திருவாரூர்: தேசிய துப்புரவுப் பணியாளர்கள் மறுவாழ்வு ஆணையராக உறுப்பினர் ஜெகதீஸ் ஹெராணி திருவாரூர் அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையத்தை ஆய்வுசெய்து அங்குள்ள சூழல்களைப் பார்த்து அலுவலர்களை கடிந்துகொண்டார்.

புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வு

By

Published : Aug 22, 2019, 3:12 PM IST

திருவாரூரில் தேசிய துப்புரவுப் பணியாளர்கள் மறுவாழ்வு ஆணையராக உறுப்பினர் ஜெகதீஸ் ஹெராணி, திருவாரூர் புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டார்.

முதற்கட்டமாக திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த ஜெகதீஷ் ஹெராணி, பார்வையிட்ட உடனே சுகாதாரப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என அலுவலர்களை கடிந்துகொண்டார். அதன்பின் துப்புரவுப் பணியாளர்களிடம் குப்பைகள் அள்ள பாதுகாப்பு கை உறைகள் வழங்கப்பட்டுள்ளதா? மாத ஊதியம் எவ்வளவு என கேட்டறிந்தார்.

பணியாளர்களின் குறைகளை கேட்கும்போது

மேலும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த அவர், இது மருத்துவமனையா இல்லை காய்கறி சந்தையா? என மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமாரிடம் காட்டமாகக் கேட்டார்.

மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டபோது

இதையடுத்து அங்குள்ள துப்புரவுப் பணியாளர்களிடம் பேசிய அவர், அவர்களின் குறைகளைக் கேட்க முற்படும்போது, தங்கள் ஊதியம், சேமிப்புத் தொகை, விடுமுறை குறித்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

அரசு மருதத்துவமனை, புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வு

இதனால், கோபமடைந்த அவர் மாவட்ட ஆட்சியர் ஆனந்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு மருத்துவமனை துப்புரவுப் பணிகள் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அதனை கவனிக்குமாறும் அறிவுறுத்தினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details