தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விளையாட்டு விபரீதம்' குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு! - குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருவள்ளுர்: 'விளையாட்டு விபரீதம்' என்பது போல் திருத்தணியில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

class six boy died after drowned in temple tank
குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

By

Published : Mar 14, 2020, 11:21 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தில் அப்பகுதியைச் சேர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 5 பேர் குளித்து விளையாடி கொண்டிருந்தனர். மாணவர்களுக்கு நீச்சல் தெரியாததால் கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது 8ஆம் வகுப்பு மாணவன் வேலன், 6ஆம் வகுப்பு மாணவன் சூர்யா ஆகியோர் விளையாடிக்கொண்டே குளத்தின் ஆழமான பகுதியில் சேற்றில் கால் சிக்கி மூழ்கிக் கொண்டிருந்தனர். நண்பர்கள் மூழ்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அவர்களது நண்பர்கள் அவர்களை காப்பாற்ற கூச்சல் போட்டனர்.

அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவர் குளத்தில் குதித்து சூர்யாவை காப்பாற்றினார். சேற்றில் சிக்கிக் கொண்ட மற்றொரு சிறுவனை மீட்க முடியாத நிலையில் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் அவர் முன்பே இறந்துவிட்டதாக கூறினார். 'விளையாட்டு விபரீதம்' என்பது போல் நீச்சல் தெரியாமல் குளத்தில் மூழ்கி பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த திருத்தணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details