தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களைகட்டிய மனுத்தாக்கல்: ஆட்டம் பாட்டத்துடன் வந்த வேட்பாளர்கள்!

திருவள்ளூர்: உள்ளாட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு, வேட்பாளர்கள் மாலை அணிந்து ஆட்டம் பாட்டத்துடன் வந்து தாக்கல் செய்தனர்.

ஆட்டம் பாட்டத்துடன் மனுத்தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள்
ஆட்டம் பாட்டத்துடன் மனுத்தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள்

By

Published : Dec 14, 2019, 2:50 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் களைகட்டத் தொடங்கியுள்ளது. கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து, ஆட்டம் பாட்டத்துடன் மேளதாளம் முழங்க வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்திருந்த வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நான்கு பேருடன் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய வரவேண்டும் என அலுவலர்கள் அளித்த விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

வடமதுரை ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மாலா ரமேஷ் தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதேபோன்று, பெரியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் காயத்ரி, உதயகுமார், ஜெயலஷ்மி, குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இன்று ஒரே நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

ஆட்டம் பாட்டத்துடன் மனுத்தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள்

மனுக்களை அலுவலர்களிடம் கொடுத்துவிட்டு வந்த வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து ஆட்டம் பாட்டத்துடன் மேளதாளம் முழங்க அவர்களை அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: மேளதாளத்துடன் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details