தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்! - CITU Demonstration

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து சிஐடியு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு வினர் ஆர்ப்பாட்டம்
சிஐடியு வினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Dec 1, 2020, 4:41 PM IST

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கையன் தலைமையில், மத்திய அரசை கண்டித்து சிஐடியூ சங்க தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்ட திருத்தத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த கூடாது, டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளை அழைத்து சுமூகமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் சட்டம் மற்றும் மின்சார சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details