தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 1, 2020, 3:29 PM IST

ETV Bharat / state

16 பேர் சட்டவிரோத பணிநீக்கம்; சிஐடியு வட்டாட்சியரிடம் மனு!

தனியார் பர்னிச்சர் தொழிற்சாலையில் பணிபுரிந்த 16 தொழிலாளர்கள் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு வட்டாட்சியரிடம் மனு
சிஐடியு வட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூர்: தனியார் தொழிற்சாலையில் 16 தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்ததை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊரடங்கு காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக 16 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர் நலத்துறை அலுவலர்களின் ஆலோசனையை ஏற்று மீண்டும் பணி வழங்க வேண்டும், தொழிலாளர்கள் சட்டபூர்வமாக வேலைநிறுத்தம் செய்யும் போது சட்டவிரோதமாக கதவடைப்பு செய்வதை கைவிட வேண்டும்.

மேலும், கடந்த ஓராண்டு காலத்தில் சிறிய தவறுக்காக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆறு தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

பின்னர் திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயலட்சுமியை சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். மேலும் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் அழைத்துப் பேசி எங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் தொழிலாளர்களையும், தொழிற்சாலை நிர்வாகத்தினரையும் இணைத்து ஒரு கூட்டம் நடத்தி இதற்கு முடிவு காண்போம் என வட்டாட்சியர் விஜயலட்சுமி உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கரோனாவால் சரிந்த ரத்தக் கொடையாளர்களின் விகிதாச்சாரம்..!

ABOUT THE AUTHOR

...view details