திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பண்டிகவானூர் பகுதியில் ஐடிசி சிகரெட் குடோன்கள் உள்ளது. ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் சிகரெட் மூலப்பொருட்கள் இங்கிருந்து, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடோனில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து குடோன் நிர்வாகிகள் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிகரெட் குடோனில் தீ விபத்து! தீ தொடர்ந்து பற்றி எரிந்ததால் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் தொடர்ந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குடோன் சுவற்றினை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தீயை அணைத்து வருகின்றனர்.
தொடர்ந்து ஒரே நேரத்தில் சிகரெட் மூலப்பொருட்கள் எரிந்ததால் நிக்கோட்டின் புகை அப்பகுதியில் சூழ்ந்துள்ளது. லேசான மழை தொடர்ந்து பெய்து வருவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சின்ன 'தோனி'யின் ரெமாண்டிக் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து