திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாதூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இன்று காலை திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக நேற்று மாலை திருத்தணி மா.பொ.சி. சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பிரமாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்திய காவல் துறையினர்! - child marriage
திருவள்ளூர்: திருத்தணியில் 15 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை காவல் துறையினர், சமூக நலத் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

Child marriage; Detained police officers!
குழந்தைத் திருமணம்; தடுத்து நிறுத்திய காவல் துறையினர்!
இத்தகவலை அறிந்த மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்கள், திருத்தணி காவல் துறையினர் திருமண மண்டபத்திற்கு விரைந்துவந்து சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமியை மாவட்ட சிறுமிகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர்.