திருவள்ளூர் அடுத்த பட்டாபிராம் பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தவர் கோமதி. இவருடைய எட்டு வயது மகள் அமிர்தவள்ளி இவருடன் தங்கியிருந்தார். (பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன)
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை! - child Harrasment case
திருவள்ளூர்: பட்டாபிராம் அருகே எட்டு வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், அமிர்தவள்ளியை அதேப் பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக 2018ஆம் ஆண்டு ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வி புகாரளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன், குற்றம்சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கி உத்தரவிட்டார். பின்னர் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.