திருவள்ளூர், நேமளூர் கிராமத்தில் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார், கோட்டாட்சியர் நந்தகுமார் ஆகியோர் முதலமைச்சரின் குறைதீர்க்கும் திட்ட முகாமில் கலந்துகொண்டனர். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை, சுடுகாடு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மனுக்களை அளித்தனர்.
ஏழு நாட்களில் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்: எம்எல்ஏ உறுதி - முதலமைச்சரின் குறைதீர்க்கும் திட்ட முகாம்
திருவள்ளூர்: முதலமைச்சரின் குறைதீர்க்கும் திட்ட முகாம் மூலம் கும்மிடிபூண்டி தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமத்திலும், ஏழு நாட்களில் மனுக்களைப் பெற்று, ஒரு மாத காலத்திற்குள் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

குறைதீர்க்கும் திட்ட முகாம்
முதலமைச்சரின் குறைதீர்க்கும் திட்ட முகாம்
பொதுமக்களிடமிருந்து கும்மிடிப்பூண்டி தொகுதி முழுவதும் ஏழு நாட்களுக்குள் மனுக்கள் பெறப்பட்டு, ஒரு மாத அவகாசத்திற்குள் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் தெரிவித்தார். காலை 10 மணி முதல் கிராம மக்கள் மனுக்களை அளிக்க வந்திருந்த நிலையில், மனுக்களைப் பெறுவதற்கு இரண்டு மணிக்கு விஜயகுமார் வந்ததால், பொதுமக்கள் நான்கு மணி நேரம் காத்திருந்து மனுக்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.