திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அரசு கலைக்கல்லூரி புதிய கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் - State College of Arts new building open
திருவள்ளூர்: திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் ரூ. 3.92 கோடி மதிப்பீட்டில் 16 வகுப்பறைகள் கொண்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
![அரசு கலைக்கல்லூரி புதிய கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5117019-thumbnail-3x2-tvlr.jpg)
இந்நிலையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ. 3.92 கோடி மதிப்பீட்டில் கல்லூரிக்கு 16 வகுப்பறைகள், 3 அறிவியல் ஆய்வுக்கூடங்கள் உட்பட அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கல்லூரியின் புதிய கட்டடத்தை திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம் நரசிம்மன் பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதையும் படிங்க: 30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் நீதிமன்றம்