திருவள்ளூர் மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில வாரங்களுக்கு முன் தொடங்கி வைத்தார். ஏரி, குளங்களை அந்தந்தப்பகுதியில் உள்ள விவசாயிகளே குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், தூர்வாரி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்தச்சூழ்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கல்பாக்கம், வயலூர், வேலூர் ஏரிகளை பொதுப்பணித்துறையின் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்பு அமைப்பின் தலைமை பொறியாளர் தனபால் ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் செயற்பொறியாளர் ஜெயகுமாரி மற்றும் உதவி செயற்பொறியாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக வயலூர் ஏரியை ஆய்வு செய்த தலைமை பொறியாளர் தனபால் அங்கு விவசாயத்திற்காக முறையான அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, டீசல் இன்ஜின்களை அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் ஏரிக் கரைகளை பலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூரில் குடிமராமத்துப் பணிகள் ஆய்வு செய்த தலைமைப் பொறியாளர் தனபால் பின்பு ஏரிக்கரையின் மீது மாடுகள் நுழையாதவாறு போடப்பட்ட தடுப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர். இதைத்தொடர்ந்து அப்பகுதி விவசாயிகளிடம் குடிமராமத்துப் பணிகள் எவ்வாறு நடக்கின்றன என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கியவரின் 200ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!