தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! - water problem

திருவள்ளூர்: புழல், சோழவரம் ஏரிகள் தற்போது வறண்டு காணப்படுவதால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

chennai-water-problem

By

Published : May 10, 2019, 2:41 PM IST

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது அக்னி நட்சத்திரம் வெயில் ஆரம்பமாகியுள்ளது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த வருடம் பருவமழை சரிவர பெய்யாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் மிகவும் வறண்டு காணப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு மூன்றாயிரத்து 300 மில்லியன் கன அடி. இதில் 106 மில்லியன் கன அடி நீர் தற்போது உள்ளது.மேலும், 85 கனஅடி நீர் சென்னை குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளவு ஆயிரத்து 81 மில்லியன் கன அடி ஆகும். இதில் தற்போது 9 மில்லியன் கன அடி நீ ர் மட்டுமே உள்ளது. அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு நீர் இருப்பு மேலும் குறைவய வாய்ப்புள்ளதால், இன்னும் ஒரு சில நாட்களில் நீர் முற்றிலுமாக வறண்டு போகும் சூழ்நிலை உள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஏரிகளை சரிவர துார்வாராததால் இந்நிலை உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details