சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமான ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் போதிய நீர்வரத்து இன்றி முற்றிலுமாக வரண்டு போயிருந்த நிலையில், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக ஏரி காட்சியளித்தது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாகவும், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து கால்வாய் வழியாக தொடர்ந்து தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளதால் அதன் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் வெறும் 0.561 டிஎம்சி மட்டுமே இருப்பு உள்ளது.
அதன் மொத்த உயரம் 24 அடியில் தற்போது வெறும் 8. 7 அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 260 கனஅடி நீர், பூண்டிநீர் தேக்கத்தில் இருந்து கால்வாய் வழியாக வந்து கொண்டிருக்கிறது.