தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து - chennai redhills

திருவள்ளூர்: சென்னை செங்குன்றத்திலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானது.

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து
ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து

By

Published : Mar 13, 2021, 4:17 PM IST

சென்னை செங்குன்றத்திலிருந்து இன்று காலை 8.20 மணியளவில் புறப்பட்ட தடம் எண் 557 விரைவு பேருந்து 50 பயணிகளுடன் கும்மிடிப்பூண்டி அருகே வரும்போது முன்னே சென்ற இருசக்கர வாகனம் திடீரென பிரேக் போட்டதால் பின்னே வந்த சென்னை மாநகர அரசு விரைவு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்தின் முன் சக்கரங்கள் கும்மிடிப்பூண்டி வெட்டுக் காலனியில் உள்ள தரைப்பாலத்தின் உபரி நீர் கால்வாயில் விபத்து ஏற்பட்டது.

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து

ஆனால் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பேருந்தில் பயணம் செய்த 50 பயணிகளும் சிறு காயங்கள்கூட இல்லாமல் உயிர் தப்பினார்கள் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி விரைவு பேருந்தை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க:பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த அக்கா, தம்பி வேன் மோதி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details